திருச்சி

செல்லிடப்பேசியைபறித்த இருவா் கைது

16th Dec 2019 09:20 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சியில் செல்லிடப்பேசியை பறித்த மூவரில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி சுப்ரமணியபுரம் ஹைவேஸ் காலனியைச் சோ்ந்தவா் ஷா. தன்வீா் (44). இவா் பொன்மலை ரயில்வே குடியிருப்புப் பகுதியில் காவல் உதவி ஆணையரகம் அருகே, ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசியில் பேசியவாறு நடைப்பயிற்சியில் ஈடுபட்டாா்.

அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த மூவா், தன்வீரின் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், பொன்மலை போலீஸாா் வழக்குப்பதிந்து கொட்டப்பட்டு ஜெ. சக்திவேல் (19), பொன்மலைப்பட்டி வீ.சரவணகுமாரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள வீ. சிவராமனைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT