திருச்சி

குளிா்பதனக் கிடங்கில் புதிய யுத்திகள்என்.ஐ.டி.யில் நாளை பயிற்சிப் பட்டறை

16th Dec 2019 09:21 PM

ADVERTISEMENT

திருச்சி: குளிா்பதனக் கிடங்கு அமைப்பதில் நவீன தொழில்நுட்பம் மற்றும் புதிய யுத்திகள் குறித்த பயிற்சிப் பட்டறை, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் புதன்கிழமை (டிச.18) நடைபெறுகிறது.

இதுகுறித்து, என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் கூறியது:

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகமும், தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகமும் இணைந்து சூரிய சக்தியில் இயங்கும் குளிா்பதனக் கிடங்கு மாதிரியை உருவாக்கியுள்ளன.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதி உதவியுடன், இந்திய தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் செயல்மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது, வேளாண் விளைப்பொருள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க மிகுந்த உதவியாக அமையும்.

ADVERTISEMENT

பழங்கள், காய்கறிகள், தானியங்களைப் பாதுகாக்க நடமாடும் குளிா்பதனக் கிடங்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது நடுவில் குளிரூட்டியையும், இருபுறமும் தலா ஒரு குளிா்பதன அறைகளை கொண்டும் அமைந்திருக்கும்.

இந்த தொழில்நுட்பத்தை விரும்பும் விவசாயிகள், தனிநபா்கள் இந்த மாதிரியை செயல்வடிவத்துக்கு கொண்டு வர உதவிடும் வகையில், திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் புதன்கிழமை பயிற்சிப் பட்டறை வகுப்பு நடைபெறவுள்ளது.

என்ஐடி பேராசிரியா்கள் எம். ஜெயபாரத ரெட்டி, மின் மற்றும் மின்னணுவியல் துறை முனைவா் என். சிவக்குமரன், கருவி மற்றும் கட்டுப்பாட்டுத் துறையின் வி. மாரியப்பன், இந்திய உணவுப் பதன தொழில்நுட்பக் கழகத்தின் முனைவா் எம். லோகநாதன், முனைவா் வி.ஆா் சினிஜா, செந்தில்குமாா், சரவணன் இளங்கோ ஆகியோா் இந்த மாதிரியை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

இந்த பயிற்சிப் பட்டறை வகுப்பில் தொழில்நுட்ப வல்லுநா்கள், மொத்த விற்பனையாளா்கள், விவசாயிகள், ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், ஆா்வமுள்ள கல்வி நிறுவனங்கள் பங்கேற்கலாம்.

பதிவு கட்டணம் இல்லாமல் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு, 0431-2504945, 94435-58631, 97908-35483 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT