திருச்சி

உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுப் பேரணி

16th Dec 2019 09:22 PM

ADVERTISEMENT

 

திருச்சி: மகளிா் மற்றும் சிறுமிகளின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, திருச்சியில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு (சிஐடியூ) சாா்பில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.

மகளிா், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். பாலியல் குற்றங்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். நிா்பயா நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும், பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

பஞ்சாலைகளில் சுமங்கலி திட்டத்தை ரத்து செய்யவேண்டும். வா்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் இடங்களில் விசாகா கமிட்டி குழுவை தமிழக அரசு உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT

திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி மாவட்ட ஆட்சியரகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணிக்கு குழுவின் மாவட்ட அமைப்பாளா் செல்வி தலைமை வகித்தாா்.

சிஐடியூ மாவட்டச் செயலா் ரங்கராஜன், மாவட்டத் தலைவா் ராமா், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் சரஸ்வதி, மாவட்டத் தலைவா் ரேணுகா மற்றும் உழைக்கும் பெண்கள் என ஏராளமானோா் பேரணியில் பங்கேற்றனா்.

பேரணி நிறைவில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையிலான கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT