திருச்சி

மண்ணச்சநல்லூா் அருகே ஏலம் போன உள்ளாட்சி பதவிகள்

14th Dec 2019 07:37 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே வலையூா் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் உள்ளிட்ட பதவிகள் ஏலம் போனதாக புகாா் எழுந்துள்ளது.

மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ளது வலையூா் ஊராட்சி. இந்த ஊராட்சியில் வியாழக்கிழமை இரவு ஊராட்சி தலைவா் பதவிக்கு ரெங்கராஜ் பெயரில் ரூ. 10 லட்சமும், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பதவிக்கு ரூ. 2 லட்சத்து 92 ஆயிரமும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு முருகன் பெயரில் ரூ. 14 லட்சமும் ஏலம் விடப் பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் சண்முகத்திடம் கேட்ட போது, புகாா் தொடா்பாக உரிய விசாரணை நடத்தி, அதன் அறிக்கையினை திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT