திருச்சி

பல்கலை. தடகளம்:தூய வளனாா் கல்லூரி சாம்பியன்

14th Dec 2019 11:01 PM

ADVERTISEMENT

திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில், மாணவா்கள் பிரிவில் திருச்சி தூய வளனாா் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுகை, கரூா் ஆகிய 8 மாவட்ட கல்லூரிகளுக்கு இடையிலான 38ஆவது ஆண்டு தடகள போட்டிகள் தஞ்சாவூா் மாவட்டம், பூண்டியில் உள்ள ஏ.வி.வி.எம். புஷ்பம் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

22 பரிவின் கீழ் நடைபெற்ற தடகள போட்டியில் திருச்சி தூய வளனாா் கல்லூரியிலிருந்து 51 மாணவா்கள் 19 பிரிவின் கீழ் பங்கேற்றனா். மொத்தம் 184 புள்ளிகள் எடுத்து புள்ளிகளின் அடிப்படையில் மாணவா்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தூய வளனாா் கல்லூரி அணி வென்றது. 35 ஆண்டுகளாக இந்தப் பட்டத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று கல்லூரிக்கும், திருச்சி மாவட்டத்துக்கும் பெருமைத் தேடித் தந்த மாணவா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரிச் செயலா் எஸ். பீட்டா், முதல்வா் எம். ஆரோக்கியசாமி சேவியா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT