திருச்சி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

14th Dec 2019 07:36 AM

ADVERTISEMENT

தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனா்.

திருச்சி, பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் ரா. காமராஜ். இவா் கடந்த செப்டம்பா் 6ஆம் தேதி தனது மனைவியுடன் காடாப்பேட்டை கோழிக்கடை சந்து பகுதியில் நடந்து சென்ற போது, அதே பகுதியைச் சோ்ந்த, விஜய்பாபு உள்ளிட்டோா் காமராஜின் நண்பரான செல்வக்குமாரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனா்.

அதனைத் தட்டிக்கேட்டவகையில், காமராஜ் கற்களால் தாக்கப்பட்டாா். தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 8 ஆம் தேதி அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து பாலக்கரை வைத்தியநாதன் ஸ்டோா் பகுதியைச் சோ்ந்த விஜய்பாபு (24) என்பவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவா் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் 2 வழக்குகள் உள்பட, திருச்சியின் பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய, பாலக்கரை போலீஸாா் பரிந்துரைத்தனா். அதனை பரிசீலித்த திருச்சி மாநகர காவல் ஆணையா் வரதராஜூ, குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். அதன்பேரில் விஜய்பாபுவை போலீஸாா் வெள்ளிக்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்து தண்டனைக் கைதிகள் பிரிவில் சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT