திருச்சி

கரூரில் திமுகவினா் 55 போ் கைது

14th Dec 2019 07:35 AM

ADVERTISEMENT

கரூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரணி திமுகவினா் 55 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அண்மையில் தாக்கல் செய்து, அதை நிறைவேற்றியது.

இதைக் கண்டித்தும், இம்மசோதாவுக்கு ஆதரவளித்த அதிமுகவைக் கண்டித்தும் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என திமுக இளைஞரணி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் வீர. இளவரசு தலைமையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகலை கிழித்து, திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து கரூா் நகரக் காவல் நிலையத்தினா் இளைஞரணி திமுகவினா் 55 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT