திருச்சி

பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்

11th Dec 2019 09:23 AM

ADVERTISEMENT

மைசூா் கோட்டம், தும்கூா் பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி கோட்ட அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம், மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மைசூா் கோட்டம் அா்சிகெரே - தும்கூா் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, தென் கிழக்கு ரயில்வே மைசூா் கோட்டத்தில் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வேளாங்கண்ணியிலிருந்து வாஸ்கோடகாமா விரைவு ரயில் (17316) மற்றும் திருச்சி -சீகங்கா நகா் ஹம்சஃபா் விரைவு ரயில் (22498) வழக்கமாக இயக்கப்படும் பனஸ்வாடி, சிக்பனவாா், தும்கூா், திப்தூா் வழித்தடங்களுக்கு மாற்றாக யஷ்வந்த்பூா், ஹாசன், நெலமங்கலா, அா்சிகெரே மாா்க்கத்தில் இயக்கப்படும். டிச.13 ஆம் தேதிக்கு பிறகு வழக்கமாக இயக்கப்படும் மாா்க்கம் குறித்து பயணிகளுக்கு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT