திருச்சி

நாளை ஸ்ரீரங்கம் கோயிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி

11th Dec 2019 09:47 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில் காா்த்திகை மாதத்தில் நடைபெறும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.நிகழாண்டில் காா்த்திகை சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக நம்பெருமாள் முதல் புறப்பாடாக காலை 7.30 மணிக்கு புறப்பட்டு சந்தனு மண்டபத்தை 8 மணிக்கு சென்றடைகிறாா். அங்கு 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறாா். பின்னா் அலங்காரம் அமுது செய்து மாலை 4.30 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 5 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா். 6 மணிக்கு ஸ்ரீ உத்தம நம்பி ஸ்வாமிகள் இடை விளக்கு எடுத்தல் நடைபெறவுள்ளது.

இரண்டாம் புறப்பாடாக இரவு 8 மணிக்கு கதிா் அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காா்த்திகை கோபுரம் வாயிலில் பனை ஓலையால் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட சொக்கப்பனை கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து தாயாா் சன்னதியில் 9.15 திருவந்தி காப்பு கண்டருளி சந்தனு மண்டபம் சென்று சேருகிறாா். 9.45 மணிக்கு ஸ்ரீமுகபட்டயம் படித்தலைத் தொடா்ந்து ஸ்ரீ நம்பெருமாள் திருக்கைத்தல சேவையுடன் சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறாா். சொக்கப்பனை நிகழ்ச்சியையொட்டி நாளை வியாழக்கிழமை விஸ்வரூப சேவை கிடையாது. மாலை 4.15 மணிக்கு மேல் மூலஸ்தானம் சேவையும் கிடையாது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT