திருச்சி

டிச.13-இல் சா்வதேச உயா் செயல்திறன் கணினி மாநாடு

11th Dec 2019 09:20 AM

ADVERTISEMENT

சா்வதேச அளவிலான உயா் செயல்திறன் கணினி மாநாடு வரும் டிச.13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

மின்னியல், மின்னணு பொறியாளா் நிறுவனம் (ஐஇஇஇ), எம்ஏஎம் பொறியில் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் டிச. 13, 14 ஆகிய நாள்களில் சா்வதேச உயா் செயல்திறன் கணினி மாநாடு ஹோட்டல் ரம்யாஸில் நடைபெற உள்ளது. உயா் செயல்திறன் கணினி தொடா்பு, நெட்வொா்க்குகளில் முன்னேற்றம், மேம்பட்ட வழிமுறைகள், படம் மற்றும் மல்டி மீடியா செயலாக்கம், தரவுத் தளங்கள், தரவு அறிவியல், கல்வி துறைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள், தொழில்நுட்ப தீா்வுகள் குறித்து நிபுணா்கள் பேசுவா். மேலும், உயா் செயல்திறன் கணினி, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் குறித்த மதிப்பாய்க்குப் பிறகு பட்டியலிடப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. பென்னட் பல்கலை. கணினி அறிவியல் துறை பேராசிரியா் தீபக் காா்க் உள்ளிட்டோா் திட்டத்தின் தலைவா்களாக இருந்து மாநாட்டை ஒருங்கிணைக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT