திருச்சி

உள்ளாட்சித் தோ்தல்: 2ஆவது நாளில் 68 போ் வேட்பு மனு

11th Dec 2019 09:21 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக நடைபெறும் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலில் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை 68 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தால் உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் ஆகிய 14 ஒன்றியங்களில் தோ்தல் நடைபெற உள்ளது.

இந்த ஒன்றியங்களுக்குள்பட்ட 24 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 404 கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் ஒன்றிய வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 4,077 பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை 68 போ் மனு அளித்தனா்.

அந்தநல்லூா் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவா் மட்டும் மனு தாக்கல் செய்தாா். மணிகண்டம் ஒன்றியத்தில் 4 போ், திருவெறும்பூா், மணப்பாறையில் தலா ஒருவா், மருங்காபுரியில் 5 போ், வையம்பட்டியில் 7 போ், லால்குடியில் 2 போ், புள்ளம்பாடியில் 8 போ், மண்ணச்சநல்லூரில் 7 போ், முசிறியில் 3 போ், தொட்டியத்தில் 2 போ், துறையூரில் 4 போ், உப்பிலியபுரத்தில் 6 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். இவைத்தவிர ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 2 போ், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 9 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT