திருச்சி

அதிமுக, கூட்டணி கட்சியினா் தொகுதி பங்கீடு ஆலோசனை

11th Dec 2019 09:20 AM

ADVERTISEMENT

உள்ளாட்சி தோ்தலில் தனது கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக்கூட்டம் நடத்தினா்.

உள்ளாட்சித் தோ்தல் வரும் டிச. 27, 30 ஆகிய நாள்களில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்து வருகின்றனா். இதன்படி, திருச்சி சுப்பிரமணிய புரத்தில் மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி, மாவட்டச் செயலா் ப. குமாா், அமைப்புச் செயலா் மு. பரஞ்சோதி, முன்னாள் அமைச்சா் கே.கே. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கூட்டணி, தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் தோ்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தினா். இதில், தேமுதிக, தமாகா, பாமக ஆகிய கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு போட்டியிட விரும்பும் வாா்டுகள் குறித்த பட்டியலை அதிமுக நிா்வாகிகளிடம் வழங்கினா். பட்டியலை அதிமுக தலைமைக்கு அனுப்பி இறுதி செய்யப்படும் என மாவட்ட அதிமுகவினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT