திருச்சி

திருடுபோன  25 பவுன் தங்க நகைகள் மீட்பு

30th Aug 2019 10:41 AM

ADVERTISEMENT

துறையூரில் கைது செய்யப்பட்ட 3 பேரிடமிருந்து அவர்கள் திருடிய 25 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர்.
துறையூர் விநாயகர் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் லோகேஸ்வரன் (33), அதே தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்திவேல் (33) ஆகிய இருவரும் துறையூரில் வேன் நிறுத்துமிடம் எதிரே உள்ள ஏடிஎம் மையத்துக்கு புதன்கிழமை சென்று சதாசிவம் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 1500 பணம் பறித்தனராம்.
தகவலறிந்த துறையூர் போலீஸார் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது இருவரும் துறையூர் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் தெற்கியூரைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் ஜெகன் (27) என்பவருடன் சேர்ந்து துறையூர், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் பதிவான நான்கு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தெரிந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் வசமிருந்த 25 பவுன் தங்க நகைகளை மீட்டு துறையூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் புவியரசு முன் வியாழக்கிழமை மூவரையும் ஆஜர்படுத்தினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT