திருச்சி

1069 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

29th Aug 2019 10:26 AM

ADVERTISEMENT

முசிறி வட்டம், கலிங்கப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாம் நிறைவு விழாவில், 1069 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தலைமை வகித்து, பல்வேறு திட்டங்களின் கீழ் 1069 பயனாளிகளுக்கு ரூ.49.09 லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை வழங்கிப் பேசினார். மேலும் பொதுமக்கள் அளித்த 125 மனுக்களையும் ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
முசிறி வருவாய்க் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் ஆறுமுகம் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் விழாவில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT