ஆக்கிரமிப்பு சாலையை மீட்டுத் தரக் கோரி, தொட்டியம் பேரூராட்சி அலுவலகத்தை வடகரை நேருஜி நகர் மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
வடகரை நேருஜி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து தொட்டியம்- செவிந்திப்பட்டி செல்லும் சாலையை கடந்த 50 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மண்சாலையை பேரூராட்சி நிர்வாகம் தார்சாலையாக மாற்றிக் கொடுத்தது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக தனி நபர் ஒருவர் இச்சாலை தனது பட்டா நிலத்தில் உள்ளது என தெரிவித்து ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி, பேரூராட்சி அலுவலகத்தை வடகரை நேருஜி நகர் மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு, தலைமை எழுத்தர் சம்பத்குமாரிடம் தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர்.