திருச்சி

தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

29th Aug 2019 10:22 AM

ADVERTISEMENT

ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, திருச்சியில் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக ஊதியம் வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் முபாரக் அலி, ரங்கராஜன், அஸ்லாம் பாஷா, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் சின்னையன், கல்லடியான் உள்ளிட்ட  பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT