திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.59.48 லட்சம்

28th Aug 2019 10:40 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ.59.48 லட்சம் கிடைக்க பெற்றுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கையை  எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை  கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலை நடைபெற்றது. இதில், ரொக்கமாக ரூ.59 லட்சத்து 48 ஆயிரத்து 765, தங்கம் 90 கிராம், வெள்ளி 1,335 கிராம், வெளி நாட்டு ரூபாய் நோட்டுகள் 563 மும் கிடைக்கப்பெற்றது. 
கடந்த மாதத்தைவிட ரூ.1 லட்சம் கூடுதலாகவும், அதே போல் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 267 ம் கிடைத்தது குறிப்பிடதக்கது.  இப்பணியில் ஐயப்பா சேவா சங்கம், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT