துறையூர் அருகிலுள்ள பி. மேட்டூரில் திங்கள்கிழமை இரவு தீப்பற்றியதில் குடிசை எரிந்து சேதமடைந்தது.
பி. மேட்டூரைச் சேர்ந்தவர் ரா. பெருமாள்(64). திங்கள்கிழமை இரவு இவருடைய குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் குடிசையும், அங்கிருந்த பொருள்களும் எரிந்து சேதமடைந்தன. குடிசையிலிருந்த யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. அக்கம்பக்கம் இருந்தவர்கள் தீயை அணைத்தனர்.