திருச்சி

திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29 மின்தடை ஏற்படும் பகுதிகள்

28th Aug 2019 10:39 AM

ADVERTISEMENT

சமயபுரம், தா. பேட்டை, குணசீலம், துறையூர்,  பகுதியில் வியாழக்கிழமை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
திருவரங்கம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரெ. சந்திரகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமயபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சமயபுரம், இருங்களூர், புறத்தாக்குடி, கொணலை, கரியமாணிக்கம், எதுமலை, தேனூர், மண்ணச்சநல்லூர், திருவெள்ளரை, மருதூர், ரத்தினங்குடி, கூத்தூர், நொச்சியம், ராஜகோபால்நகர், மேல்பத்து, பாச்சூர், வி. துறையூர், மாடக்குடி, ஈச்சம்பட்டி, எடயப்பட்டி, தத்தமங்கலம், அய்யம்பாளையம், சிறுகுடி, கீழப்பட்டி, வீராணி, மணியம்பட்டி, சாலப்பட்டி, சிறுபத்தூர், ராசாம்பாளையம், தழுதாளப்பட்டி, அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், வங்காரம், ஆயக்குடி, பூனாம்பாளையம், காளவாய்ப்பட்டி, கன்னியாக்குடி, வலையூர், பாலையூர், பெரும்புதூர், தேவிமங்கலம், 
கட்டயன்பாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தா.பேட்டை பகுதி:  இதேபோல், தா.பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை,  தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அலகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவானூர் புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமணபுரம், 
பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்கலம், ஜம்புநாதபுரம், திருத்தலையூர், சு. கோம்பை, நு. பாதர்பேட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் 
இருக்காது என முசிறி மின்வாரிய செயற்பொறியாளர் சு. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குணசீலம் பகுதி:   குணசீலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஏவூர், அய்யம்பாளையம், ஆமூர், குணசீலம், வாய்த்தலை, மாங்கரைப்பேட்டை, நெய்வேலி,  கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீரமணிப்பட்டி, திண்ணக்கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  முசிறி செயற்பொறியாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறையூர்/ உப்பிலியபுரம்: துறையூர் மின் கோட்டத்துக்குள்பட்ட கொப்பம்பட்டி, த.முருங்கப்பட்டி, பாலகிருஷ்ணம்பட்டி, தங்கநகர், புத்தனாம்பட்டி. து.ரெங்கநாதபுரம், மேலகொத்தம்பட்டி உள்ளிட்ட துணை மின் நிலையங்களில்  வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும்  கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், மாராடி, வைரிச்செட்டிப்பாளையம், பி. மேட்டூர், எஸ்.என். புதூர், கே.எம். புதூர், சோபனபுரம், து. ரெங்கநாதபுரம், பச்சமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிப்பாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த. முருங்கப்பட்டி, த. மங்கப்பட்டி, த. பாதர்பேட்டை, கண்ணனூர், கண்ணனூர் பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளுர், வேலாயுதம்பாளையம், எ. பாதர்பேட்டை,  பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர்,வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், து.களத்தூர், புலிவலம், தேனூர் , பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம்  பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் துறையூர் மின் கோட்டச் செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT