திருச்சி

சாலை விபத்தில்  ஒருவர் பலி

28th Aug 2019 10:42 AM

ADVERTISEMENT

திருச்சியில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
திருச்சி பீமநகரை சேர்ந்தவர் அன்பழகன் (40). இவர், திங்கள்கிழமை இரவு திருச்சி-மதுரை நெடுஞ்சாலை ரஞ்சிதபுரம் பேருந்து நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் அன்பழகன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
திருச்சி போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சேலம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமாரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT