திருச்சி பைந்தமிழியக்கம் 67-ஆவது மாத பாப்பொழிவு ஆய்வரங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் தமிழ்த் தென்றல் பிறந்த நாள் விழாவாக நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு இவ்வியக்கத்தின் இயக்குநர் பழ. தமிழாளன் தலைமை வகித்தார். புரவலர் கு.ம. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
மாணவர் அரங்கத்தில் விடுதலை நாள், உயிரினும் சிறந்தது ஒழுக்கம் என்ற தலைப்புகளில் ஹரீஷ்ராகவன், தனுஸ்ரீயும், மரபுப்பாவரங்கத்தில் முறையே, அறமார் அரசே அரசு, இன்பவூற்று எதுவிடுதலை என்ற தலைப்புகளில் சக்திவேலன், ஆறுமுகம், வேல்முருகன் ஆகியோர் பாடினர். தமிழ்த் தென்றல் திரு.வி.க. என்ற தலைப்பில் தூயவளனார் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் பி. செல்வக்குமரன் பேசினார். நிகழ்வில் துணை இயக்குநர் சொ.வேல்முருகன், தண்டாயுதபாணி, பழனியாண்டி, சித்திரா, இல.மகேந்திரன், சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர். நிறைவில் வைரசந்திரன் நன்றி கூறினார்.