எழுத்தாளர் சரஸ்வதி பஞ்சு மறைவையொட்டி, திருச்சியில் நினைவேந்தல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சி உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கிரிஜா மணாளன் தலைமை வகித்தார். எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி, காமாட்சிராஜன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எழுத்தாளர் தஞ்சாவூர் தாமு உள்ளிட்ட எழுத்தாளர்கள், திருச்சி நகைச்சுவை மன்றச் செயலர் க.சிவகுருநாதன் உள்பட பலர் பங்கேற்று பங்கேற்று, சரஸ்வதி பஞ்சு தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து பேசினர்.
உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பா.சேதுமாதவன், செயலர் ஆர்.அப்துல்சலாம் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.