திருச்சி

1 லட்சம் பனை விதைகள் மற்றும்  50,000 மரக்கன்று நடும் பணி துவக்கம்

23rd Aug 2019 10:16 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி முதல்நிலை பேரூராட்சி பகுதியில் 1 லட்சம் பனை விதைகள் மற்றும் 50 அயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகளுக்கான துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (பொறுப்பு) ஆர். மணிமாறன் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார். கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து, பேரூராட்சி  முன்னாள் தலைவர் ஜேக்கப், அரிமா சங்க தலைவர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்கட்டமாக 2,500 பனை விதைகளையும், 2,500 மரக்கன்றுகளையும் பேரூராட்சி பகுதியில் உள்ள பெரிய ஏரி, புவுடையன் ஏரி கரைகளை சுற்றியும், புள்ளம்பாடி வாய்க்கால் பகுதியிலும் நட்டு வைத்தனர்.
சமயபுரத்தில்.... திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரம் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஊராட்சியில் உள்ள  கோல்டன் நகரில்  நடைபெற்ற இவ் விழாவிற்கு  மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கே.சரவணன் (ஊராட்சிகள்) தலைமை வகித்து, விழாவிற்கு வந்திருந்த மக்களுக்கு வேம்பு, மாதுளை, நெல்லி, புங்கன் போன்ற  பல்வேறு வகையான 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.
மேலும், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். ராஜேந்திரன்( வட்டாரம்), கிராம நிர்வாகஅலுவலர் என்.மகேஸ்வரி, வால்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT