திருச்சி

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி

23rd Aug 2019 10:17 AM

ADVERTISEMENT

திருச்சியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் அமிர்த வித்யாலயம் பள்ளி முதலிடம் பிடித்தது. 
திருச்சி ரெட்டைவாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில், இப்போட்டிகள் இரண்டு நாள்கள் நடைபெற்று முடிந்தன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 14 வயதிற்கு உள்பட்டோர் பிரிவு போட்டியில் 13 பள்ளிகளை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர். 
தொடக்க விழாவில் உறையூர் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ச. சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடக்கி வைத்தார். இறுதிப்போட்டியில் அமிர்த வித்யாலயம், காவேரி குளோபல் அணிகள் விளையாடின. இதில் அமிர்தா வித்யாலயம் பள்ளி 25:6 என்ற கணக்கில் காவேரி குளோல் அணியை வென்று முதலிடம் பிடித்தது. 
இதே போல 19 வயது பிரிவு மாணவர்களுக்கான போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் 15 அணிகள் கலந்து கொண்டு விளையாடியதில், இறுதிப் போட்டியில் அமிர்தா வித்யாலயம், திருவெறும்பூர் செல்லம்மாள் அணி விளையாடின. முடிவில் அமிர்தா வித்யாலயம் 40:17 என்ற கணக்கில் செல்லம்மாள் அணியை தோற்கடித்தது. தொடர்ந்து மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT