திருச்சி

பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் 3ஆவது நாளாக போராட்டம்

23rd Aug 2019 10:19 AM

ADVERTISEMENT

பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி தொழிலாளர் சங்கத்தினர் 3ஆவது நாளாக வியாழக்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நாட்டில் உள்ள 41 பாதுகாப்புத் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி தொழிலாளர் சங்கத்தினர் கடந்த செவ்வாய்கிழமை முதல் ஒரு மாத கால வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். 
2ஆம் நாளான புதன்கிழமை இளநிலை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றதால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 
தொடர்ந்து 3வது நாளாக  வியாழக்கிழமை படைக்கலன் தொழிற்சாலையில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதேபோல கனரக உலோக ஊடுருவி தயாரிப்பு தொழிற்சாலையிலும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT