துறையூர் அருகே வீட்டருகே அறுந்து கிடந்த மின் கம்பியை அப்புறப்படுத்த முயன்ற பெண் உயிரிழந்தார்.
துறையூர்அருகே பள்ளிநத்தம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி பழனியம்மாள்(40). வெள்ளிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் மழை பெய்தபோது வீசிய பலத்த காற்றில், மின் கம்பத்திலிருந்து அவருடைய வீட்டுக்கு வரும் மின் கம்பி அறுந்து கிடந்தது. அதனை பழனியம்மாள் சனிக்கிழமை காலை அகற்ற மின் கம்பியை தொட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பான தகவலின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.