திருச்சி கிழக்கு கோட்டை கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் குமரவேல். இவர், வெள்ளிக்கிழமை காலை குடமுருட்டி பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திருபாதிரிபுலியூர் பிரபாகரன்(27), கம்பரசம்பேட்டை துரைசாமி(20) ஆகிய இருவரும் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து குமரவேல் கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.