திருச்சி

ஜேம்ஸ் பள்ளியில் கலை விழா

18th Aug 2019 03:31 AM

ADVERTISEMENT


திருச்சி ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளியில் கலை விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
திருச்சி ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளியில் ஜேம்பெஸ்ட்-2019 விழா நடைபெற்றது. விழாவில், பள்ளியின் தாளாளர் யூஜின் தலைமை வகித்தார். கல்வி செயல்பாடுகளின் அதிபர் செபாஸ்டியன் வென்னி , பள்ளி முதல்வர் பீட்டர் அலாசியஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் கலந்துகொண்டு விழாவைத் தொடக்கி வைத்தார். விழாவில், 17 பள்ளிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், அறிவுத்திறன், தனித்திறன், விநாடி வினா, இசை, நடனம், குழு போட்டிகள் நடத்தப்பட்டன. 
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆர்.எஸ்.கே மேல்நிலைப்பள்ளி வென்றது. விழாவினை, முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், சக்தி, விஷ்ணு, அப்ரர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். இதில், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT