திருச்சி

கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியம்

18th Aug 2019 03:26 AM

ADVERTISEMENT


மொழி, இலக்கியம் கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பதிவாளர் கோபிநாத்.  
       திருச்சி பராதிதாசன் பல்கலை. தொழில்முனைவோர் மற்றும் சுய வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் புதுமையான கல்வி கற்பித்தல் என்ற தலைப்பில் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கிற்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது: 
       இலக்கியம் மனதிற்கு மகிழ்ச்சியை அளிப்பது மட்டுமின்றி அச்சமூகத்தின் காலம், கலாசாரம், பண்பாடு மற்றும் வளர்ச்சி பற்றி தெரிவிக்கிறது. மொழி மற்றும் இலக்கியம் சார்ந்த ஆசிரியர்கள் எப்போதும் கல்வி முறைகளில் வழக்கமான கற்பித்தல் நடைமுறைகளில் அக்கறை கொண்டுள்ளனர். இதன் விளைவாக கற்பித்தல் முறையானது புதுமையும், பழமையும் சேர்ந்து இருக்கின்றன. மொழி, இலக்கியம் கற்பித்தலில் தொழில்நுட்ப வளர்ச்சியின் பங்கு மிகவும் முக்கியமானது. கல்வி என்பது சமூக வளர்ச்சி, சமுதாய மேம்பாட்டிற்கு இன்றியாமையாதது. சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாடு, நாட்டு மக்களின் கல்வித் தரத்தை சார்ந்து அமையும். மாணவர்கள் தொழில்நுட்பத்தை கடந்து தனி திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். 
கருத்தரங்கில் பல்கலைக்கழக தொழில்முனைவோர் மற்றும் சுயவேலைவாய்ப்பு மைய இயக்குநர் இ. ராம்கணேஷ், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் இளங்கோ, மலேசியப் போராசிரியர் சோஹைமி அப்துல் ஆசிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக புதுமையான கற்பித்தல் முறை 2019 புத்தகத்தை பதிவாளர் கோபிநாத் வெளியிட்டார்.  
தொடர்ந்து மலேசியப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணங்களை பரிமாற்றிக் கொண்டனர்.
 கருத்தரங்கில், 150 மாணவர்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். முடிவில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.வீரமுத்து நன்றியுரையாற்றினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT