திருச்சி

அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

18th Aug 2019 03:30 AM

ADVERTISEMENT


திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகேயுள்ள தலைமலைப்பட்டி அரசுப் பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், தலைமலைப்பட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளி 70 ஆவது ஆண்டுகள் பழைமை வாய்ந்த இப்பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் கலையரசி தலைமை வகித்தார். இதில், பள்ளி உருவாக காரணமாக இருந்த ஆதிமூலரெட்டியார் படத்தை ஊர் பெரியவர் கிருஷ்ணன் திறந்து வைத்தார் இதனைத் தொடர்ந்து திருச்சி அஜந்தா உணவக உரிமையாளர் வேணுகோபால், மூத்த தமிழாசிரியர் சீனிவாசன் ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, மும்பை பாபா அணுசக்தி நிலையப் பள்ளியில்  பணியாற்றும் ஆசிரியர் நடராஜன், மூத்த தமிழாசிரியர்கள் திருவேங்கடம், சீனிவாசன் மற்றும் மேய்க்கல்நாயக்கன்பட்டி ஐஓபி வங்கி மேலாளர் விஜயகாந்த் ஆகியோர் தமது பழைய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி  வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தலைமலைப்பட்டி அரசு உயர்நிலைபள்ளியில் 2017-18 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.  ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ராமராஜன்,சிவசங்கரன், ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT