திருச்சி

மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கியதில் தம்பதி பலி

11th Aug 2019 04:34 AM

ADVERTISEMENT


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மின்சாரத்தால் தாக்கப்பட்ட மனைவியைக்  காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்தார். 
மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி ராஜகோபால் மகள் ஜான்சிராணிக்கும் (25). பிச்சம்பட்டி பொன்னுச்சாமி மகன் தர்மருக்கும் (30) கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.  இதுவரை குழந்தை இல்லை. சென்னையில் உள்ள தனியார் நிறுவனஊழியரான தர்மர் விடுப்பில் ஊருக்கு வந்திருந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு ஜான்சிராணி துணிகளை துவைத்து காயப்போடச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்கான மின் வயர் இடையில் துண்டிக்கப்பட்டு கொடிக்கம்பியோடு இணைந்திருந்தது தெரியாமல் துணிகளை காயப் போட்ட  ஜான்சிராணி மீது மின்சாரம் பாய்ந்தது.  
மனைவியின் அலறல் கேட்டு ஓடி வந்த தர்மர் அவரை காப்பாற்ற முயன்ற நிலையில் மின்சாரம் பாய்ந்து இருவரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சென்ற புத்தாநத்தம் போலீஸார் சடலங்களை மீட்டு மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  தம்பதியின் உயிரிழப்பு அப்பகுதியினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT