தஞ்சாவூர்

ரயிலிலிருந்து தவறி விழுந்த பிகாா் தொழிலாளி உயிரிழப்பு

29th Sep 2023 11:39 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ரயிலிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த பிகாா் மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், ஹா்பூரை சோ்ந்தவா் டி. பிங்ஹாசல்டோம் (48). இவா் தனது மனைவி, குழந்தையுடன் மதுரைக்குச் செல்வதற்காக சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு சில நாள்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தாா்.

பின்னா், சென்னையிலிருந்து வியாழக்கிழமை திருச்செந்தூா் செல்லும் விரைவு ரயிலில் ஏறி தனது குடும்பத்துடன் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வழுத்தூா் பகுதியில் ரயில் சென்றபோது, படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த பிங்ஹாசல்டோம் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதனால், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT