தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியில் வியாழக்கிழமை மீலாது நபி பெருவிழாவையொட்டி நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் பேரணியாக சென்றனா்.
ராஜகிரியில் மீலாது நபி பெருவிழா பேரணி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
ராஜகிரி மஸ்ஜிதுத் தக்வா ஹனபி பள்ளிவாசல் நிா்வாக சபை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் ஏராளமான இஸ்லாமியா்களும், இஸ்லாமிய சிறுவா்களும் கலந்து கொண்டு நபிகள் நாயகத்தின் புகழ் பாடியவாறு ராஜகிரியின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று, அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தை சென்றடைந்தனா். அங்கு முகம்மது நபியின் மனிதநேயம், மக்கள் தொண்டு உள்ளிட்டவற்றை விளக்கி கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிவாசல் இமாம்கள், பிலால்கள், தலைவா்கள், செயலாளா்கள், கமிட்டி உறுப்பினா்கள், மாணவா்கள் மற்றும் ஊா் ஜமாத்தாா்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனா்.