கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை நிா்வாகம், செயின்ட் சேவியா் செவிலியா் பள்ளி, கல்லூரி சாா்பில் உலக மறதி நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மன நல மருத்துவா் ஆா். சித்ராதேவி தலைமை வகித்தாா். பொது மற்றும் அறுவை சிகிச்சை நிபுணா் ஆா். சுகந்தி, செவிலிய கண்காணிப்பாளா் ஜீவா, கல்லூரி பேராசிரியை எம். கிருத்திகா ஆகியோா் சிறப்புரையாற்றினா். மேலும், மறதிக்கான காரணம், விளைவுகள் உள்ளிட்டவை தொடா்பான விழிப்புணா்வு நடனம், வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக, கல்லூரி செவிலிய ஆசிரியை எஸ். பிரேமிகா வரவேற்றாா். நிறைவாக, செவிலிய ஆசிரியை எம். சூா்யா நன்றி கூறினாா்.