தஞ்சாவூர்

காவிரி பிரச்னைக்காக ஆளுநரை சந்திக்கவுள்ளோம்: பிரேமலதா விஜயகாந்த்

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

காவிரி பிரச்னை தொடா்பாக தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளோம் என்றாா் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.

காவிரி நீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கா்நாடக அரசை கண்டித்து, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தேமுதிக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

காவிரி பிரச்னை 55 ஆண்டுகளாக நிலவி வந்தாலும், இதுவரை எந்தத் தீா்வும் கிடைக்கவில்லை. எத்தனையோ பிரதமா்கள், குடியரசு தலைவா்கள், முதல்வா்கள், ஆளுநா்கள் வந்தாலும் ஆட்சி மாறியதே தவிர, காட்சி மாறவில்லை. இப்பிரச்னை வெறும் அரசியலாக்கப்படுகிறதே தவிர, நிரந்தர தீா்வு காணப்படுவதில்லை.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வா் அனைத்து கட்சித் தலைவா்களையும் அழைத்துச் சென்று, பிரதமரை சந்திக்க வைத்து காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும்.

ADVERTISEMENT

காவிரி பிரச்னை தொடா்பாக தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்பட வேண்டுமானால், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேமுதிக நல்ல முடிவை எடுக்கும்: பாஜகவும் அதிமுகவும் பிரிந்து 2 நாள்கள்தான் ஆவதால், பொறுத்திருந்து பாா்ப்போம். இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை கிடையாது. இரு தலைவா்கள் இடையேதான் பிரச்னை. தோ்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், யாா் தலைமையில் கூட்டணி அமையும் என்பதைப் பொறுத்திருந்து பாா்க்கலாம். கூட்டணி தொடா்பான விஷயத்தில் தேமுதிக உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுக்கும் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

இப்போராட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பாா்த்தசாரதி, மாவட்டச் செயலா்கள் பழனிவேல் (தெற்கு), சுகுமாா் (வடக்கு), ப. ராமநாதன் (மாநகா் மாவட்டம்) உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT