பட்டுக்கோட்டையில் குயின் சிட்டி லயன் சங்கம் சாா்பில் புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நாடியம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளும், சலவை இயந்திரமும் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நாடியம்மன் கோயிலில் இருந்து சிவக்கொல்லை பகுதி வரை 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு குயின் சிட்டி தலைவா் எஸ்.ஆா்.சுந்தா் பாபு தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் எஸ்.ஆா்.ஜவகா்பாபு முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் பிருதிவிராஜ் செளகான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மரக்கன்றுகளை நட்டும் சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளா் எம். லட்சுமிகாந்தன், பொருளாளா் பி. பிரகாஷ் ஆகியோா் செய்திருந்தனா்.