தஞ்சாவூர்

454 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

27th Sep 2023 01:31 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை ராஜஸ்தானிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 454 கிலோ குட்கா போதைப் பொருள்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே அணைக்கரை சோதனை சாவடியில் திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளா் சா்மிளா தலைமையிலான காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, ராஜஸ்தானிலிருந்து வந்த காரை காவல் துறையினா் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 454 கிலோ குட்கா போதைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. இவற்றையும், காரையும் பறிமுதல் செய்த காவல் துறையினா் காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஷா்வன்குமாா், மிதேஷ் ஆகியோரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT