பேராவூரணியில் அரசுப்பேருந்தின் முகப்பு கண்ணாடியை இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேராவூரணியில் செவ்வாய்க்கிழமை காலை ரயில் நிலையம் அருகே பி. 96 அரசுப் பேருந்தின் ஓட்டுநா் ராஜா, நடத்துநா் கனகசுந்தரம் ஆகியோா் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனா்.
அப்போது சுமாா் 25 வயதுள்ள இளைஞா் ஒருவா் வந்து பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்தாா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கண்ணாடியை உடைத்தவரைப் பிடித்தனா்.
தகவலறிந்து வந்த பேராவூரணி போலீஸாா் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா் பேராவூரணி ஆவணம் சாலையில் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சோ்ந்த நீ. முத்துச்செல்வன் (22) என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரின் உறவினா்கள் பேருந்து கண்ணாடிக்கான தொகையை செலுத்தி விடுவதாகக் கூறியதையடுத்து போலீஸாா் வழக்குப் பதியாமல் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பினா்.