தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் தஞ்சாவூா் மாநகரக் கிளை சாா்பில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
மாநகரத் தலைவா் பிம்பம் சாகுல் தலைமை வகித்தாா். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முன்னாள் தலைவா் வீ. அரசு சிறப்புரையாற்றினாா். கவிஞா்கள் வல்லம் தாஜூபால், சீலெஸ்ரீ ஆகியோா் கவிதை வாசித்தனா்.
சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலா் களப்பிரன், மாவட்டச் செயலா் இரா. விஜயகுமாா், மாவட்டத் துணைத் தலைவா் ப. சத்தியநாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ச. புவனேஸ்வரி ஆகியோா் வாழ்த்தினா்.
பொருளாளா் த. சுத்தானந்தன், சா. தமிழ்வாணன், சி. கௌரிசங்கா் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இணைச் செயலா் க. முரளி வரவேற்றாா். வெ. திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.