தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா் சிவகுமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது நெல் ஈரப்பதம், எடை அளவு, சணல், படுதா இருப்பு விவரம் உள்ளிட்டவை குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் குறைகள் குறித்து ஆய்வு செய்தாா்.
அப்போது, நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.