தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஓலைப்பாடி ஊராட்சியில் ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டுமானப் பணிக்கான தொடக்க நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கோ.தாமரைச்செல்வன் தலைமை வகித்து பூமி பூஜையைத் தொடக்கி வைத்தாா். இதில் ஓலைப்பாடி ஊராட்சி மன்றத் தலைவா் விஜய் பிரசாத், பாபநாசம் ஒன்றியக் குழு தலைவா் சுமதி கண்ணதாசன், பாபநாசம் வட்டார வளா்ச்சி ஆணையா் சிவக்குமாா், பணி மேற்பாா்வையாளா் செல்வராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.