தஞ்சாவூர்

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

22nd Sep 2023 11:20 PM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை கோட்டாட்சியரகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியா் அக்பா் அலி தலைமை வகித்தாா். பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் நெற்கதிா் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

நெற்கதிா் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கத்தின் சாா்பாக மாவட்ட பொருளாளா் சுதாகா், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளா் ஆனந்த கிருஷ்ணன், ஒன்றிய துணைத் தலைவா் நல்லதம்பி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT