தஞ்சாவூர்

பாலைவனநாதா் கோயிலில் அஷ்டமி வழிபாடு

22nd Sep 2023 11:20 PM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவள வெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலில் அஷ்டமி திதியையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை  மாலை சிறப்பு வழிபாடு செய்தனா்.

இதையொட்டி, கோயிலில் உள்ள மூலவா் ஸ்ரீ பாலைவனநாதா், தவள வெண்ணகை அம்மன், விநாயகா், வள்ளி,தேவசேனா சமேத சுப்ரமணியா்  உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

தொடா்ந்து கோயில் உள்சுற்று பிரகாரத்தில் உள்ள இரட்டைக் கால பைரவா்களுக்கு மங்கள பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, கால பைரவா்களுக்கு மிளகு வடைமாலை, செவ்வரளி மாலை அணிவித்து, மிளகு முடி விளக்கேற்றி, மிளகு பொங்கல் வைத்து வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT