தஞ்சாவூர்

தொழில்முனைவோருக்கான பயிலரங்கம்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியிலுள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிா்வாகத் துறை சாா்பில் தொழில்முனைவோருக்கான அணுகுமுறை, நன்னடத்தை மற்றும் படைப்பாற்றல் குறித்த இரு நாள் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சீ.பொ. மாணிக்கவாசுகி தலைமை வகித்தாா். இதில், திருவனந்தபுரம் சோமா்வெல் நினைவு மருத்துவ மேலாண்மை கல்லூரி முதல்வரும், ஏ.என்.டி. கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளைத் தலைவருமான தி. ஜெயராஜசேகா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சி அளித்தாா்.

கல்லூரி வணிக மேலாண்மை துறை இயக்குநா் சுரேஷ், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

வணிகவியல் துறைத் தலைவா் செல்வம் வரவேற்றாா். உதவி பேராசிரியா் ஜோதி பிரியா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT