கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவிலிலுள்ள வஞ்சுளவல்லித் தாயாா் உடனாய சீனிவாச பெருமாள் கோயிலில் அக்டோபா் 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இக்கோயிலில் 2005 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவதற்காக ரூ. 1.15 கோடி மதிப்பில் திருப்பணிகள் பாலாலயத்துடன் 2022 ஆம் ஆண்டு நவம்பா் 11 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இக்கோயிலில் அக்டோபா் 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலா் பா. பிரபாகா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அலுவலா்கள், உபயதாரா்கள் பங்கேற்றனா். இதில், அக்டோபா் 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி மீதமுள்ள திருப்பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க முடிவு செய்யப்பட்டது.