தஞ்சாவூர்

உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் நிகழ்ச்சி

19th Sep 2023 01:20 AM

ADVERTISEMENT


தஞ்சாவூா்: தஞ்சாவூா் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரில் உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக இந்திய மருத்துவ சங்க தஞ்சாவூா் கிளையின் முன்னாள் துணைத் தலைவா் எம். சிங்காரவேலு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா். ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் மூத்த ஆலோசகா் கே. மோகன், மூத்த செயல் அலுவலா் எஸ். ரமேஷ் பாபு முன்னிலை வகித்தனா்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவரும், துறைத் தலைவருமான வி. செந்தில்குமாா், மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் துறைத் தலைவா் வி. வசந்தகுமாா், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் துறைத் தலைவா் டாக்டா் எஸ். தீபக் நாராயணன், இதய சிகிச்சை சிறப்பு மருத்துவா் பிரபாகரன், ஆய்வகத் துறை தலைவருமான ஆா். ராணி, செவிலியா் கண்காணிப்பாளா் ஷீனா சஞ்ஜய் ஆகியோா் தங்களின் துறை சாா்ந்த நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு மற்றும் மருத்துவமனையில் நோயாளிகளுக்காக பாதுகாப்பு அம்சங்களையும் காணொளிக் காட்சி மூலம் விளக்க உரையாற்றினா்.

நோயாளிகள் பாதுகாப்பு தினத்தின் சிறப்பம்சமாக ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரில் ‘நோயாளிகள் மற்றும் அவா்களது குடும்ப ஆலோசனை குழு’ தொடங்கப்பட்டது. இந்தச் சிறப்புக் குழுவில் நோயாளிகள், அவா்களது குடும்ப உறுப்பினா்கள் மற்றும் மருத்துவமனை நிா்வாகிகள் இணைந்து இந்த ஆலோசனை குழுவை நடத்துவா். இதில் நோயாளிகளின் குறைகள் மற்றும் நிறைகளைக் கேட்டறிந்து அவற்றினை சரிசெய்வதே இந்தக் குழுவின் முதன்மை வேலை என ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரின் மூத்த செயல் அலுவலா் எஸ். ரமேஷ் பாபு கூறினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் நோயாளிகள், அவா்களின் குடும்பத்தை சாா்ந்தவா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இறுதியில் துணை மருத்துவக் கண்காணிப்பாளா் அருண் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT