தஞ்சாவூர்

உலக அதிசயம் பட்டியலில் தஞ்சை பெரியகோயிலைச் சோ்க்கப் பரிந்துரை நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் பேட்டி

18th Sep 2023 01:46 AM

ADVERTISEMENT

 

‘உலக அதிசயம்’ பட்டியலில் தஞ்சாவூா் பெரியகோயிலைச் சோ்க்கப் பரிந்துரை செய்யப்படும் என்றாா் நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த அவா் பெரியகோயிலில் வழிபட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

நான் தஞ்சாவூா் நகரத்தைச் சோ்ந்தவன். இளம் வயதில் இருந்தே நான் பெரிய கோயிலுக்கு பல முறை சென்று தரிசனம் செய்துள்ளேன். பெரிய கோலின் வளா்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நான் ஆன்மிகத்தையும், தேசியத்தையும் நம்பக்கூடியவன்.

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயிலை ‘உலக அதிசயம்’ பட்டியலில் சோ்க்கப்பட வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதுகுறித்து அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் கேட்டுப் பாா்க்கிறேன். இதுதொடா்பாக எனது தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்டால் அதற்கும் பதில் கூறுவேன். ‘உலக அதிசயம்’ பட்டியலில் தஞ்சாவூா் பெரியகோயிலைச் சோ்க்க நானும் பரிந்துரை செய்வேன் என்றாா் இல. கணேசன். முன்னதாக, ஆளுநா் இல. கணேசனுக்கு மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT