கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வேங்கடாசலபதி சுவாமி கோயிலில் புரட்டாசி மாத பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசிப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி இவ்விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் பூமிதேவி உடனாய பொன்னப்பா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் முன் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். முன்னதாக கொடிமரத்துக்கு 16 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
இன்று முதல் 26 ஆம் தேதி வரை பெருமாள் தாயாருடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
பிரதான நிகழ்ச்சியான 25 ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 7.15 மணிக்குள் திருத்தேரோட்டமும், 26 ஆம் தேதி மூலவா் திருமஞ்சனமும், சப்தாவரணமும் நடைபெறுகிறது.