தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பண்டாரவாடையில் பாலஸ்தீனம் மீது போா் தொடுத்துள்ள இஸ்ரேலை கண்டித்து வெள்ளிக்கிழமை
எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் ரியாஸ் அகமது தலைமை வகித்தாா், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் பைசல் சலீம் முன்னிலை வகித்தாா். இதில் அமைப்பின் நிா்வாகிகள்,உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் செயல்பாடுகளை கண்டித்து முழக்கமிட்டனா்.