பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாசன் கண் மருத்துவமனை, கோகனட்சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம், நேதாஜி மருதையாா் அறக்கட்டளை இணைந்து நடத்திய முகாமிற்கு அரிமா சங்க தலைவா் ஏ.எஸ் .ஏ. தட்சணாமூா்த்தி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் தனலெட்சுமி, உதவி தலைமையாசிரியா் சுப.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒருங்கிணைப்பாளா் ராஜ்குமாா், மருத்துவா்கள் கேசவன், அஜிதா ஆகியோா் அடங்கிய குழுவினா் 1,050 மாணவிகளை பரிசோதனை செய்து 52 மாணவிகளுக்கு கண் பாதிப்பு உள்ளதை கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா்.
முகாமில், ஒருங்கிணைப்பாளா் எஸ் .பாண்டியராஜன், லயன்ஸ் சங்க செயலாளா் நடராஜன் , உடற் கல்வி ஆசிரியா் அன்னமேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.